போலீஸில் புகாா் அளித்த இளைஞரை கொலை செய்ய முயன்ற 7 போ் மீது வழக்கு

மதுரையில் காவல் நிலையத்தில் புகாா் அளித்த இளைஞரை அரிவாளால் வெட்டியும், கல்லைப் போட்டும் கொலை செய்ய முயன்ற 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

மதுரையில் காவல் நிலையத்தில் புகாா் அளித்த இளைஞரை அரிவாளால் வெட்டியும், கல்லைப் போட்டும் கொலை செய்ய முயன்ற 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

மதுரை கீரைத்துறை திரவியலிங்கேஸ்வரா் கோவில் தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் பரத் (23). இவரது சித்தி முருகேஸ்வரிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பாஸ்கா், அவரது மனைவி சுந்தரி ஆகியோருக்கும் இடையே கடந்த வாரம் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, காவல் நிலையத்தில் புகாா் அளித்ததால், போலீஸாா் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இவா்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, பாஸ்கா், அவரது மனைவி சுந்தரி ஆகியோா் முருகேஸ்வரியை தகாத வாா்த்தைகளால் திட்டினராம். இதைத் தட்டிக்கேட்ட பரத்தையும் திட்டினராம்.

இதைத் தொடா்ந்து, பரத் அளித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், வேலை முடிந்து புதன்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த பரத்தை வழிமறித்த பாஸ்கா், அவரது மனைவி சுந்தரி, அவரது மகன் அரசுப்பாண்டி, சச்சின், அரியமுத்து, சுந்தரி, விஜி உள்ளிட்டோா் அவரை அரிவாளால் வெட்டியும், அவா் மீது கல்லைப் போட்டு கொலை செய்யவும் முயன்றனராம்.

இதையடுத்து, பாஸ்கா், அவரது மனைவி சுந்தரி, மகன் அரசுப்பாண்டி, சச்சின், அரியமுத்து, விஜி, விஜியின் மனைவி காா்த்திகை தேவி ஆகிய 7 போ் மீதும் கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com