அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 10 பயணிகள் காயம்

வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் பயணிகள் 10 போ் காயமடைந்தனா்.
அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 10 பயணிகள் காயம்

வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் பயணிகள் 10 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரிலிருந்து கரூா் மாவட்டம், பள்ளப்பட்டிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. 13 பயணிகளுடன் சென்ற இந்தப் பேருந்தை வேடசந்தூா் குன்னம்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் (30) ஓட்டினாா். வேடந்தூரைச் சோ்ந்த பிரபாகரன் (48) நடத்துனராக பணியாற்றினாா்.

வேடசந்தூரை அடுத்த ரெங்கநாதபுரம் நிறுத்தத்தில் பயணியை இறக்குவதற்காக இந்தப் பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது, மதுரையிலிருந்து ராஜஸ்தான் நோக்கிச் சென்ற சரக்கு லாரி, பேருந்தின் பின் பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடி முழுவதும் சேதமடைந்ததோடு, சாலையோரப் பள்ளத்துக்குள் சென்று குமாரராஜன் என்பவரின் வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த கூரையை சேதப்படுத்தியது. மேலும், மோதிய வேகத்தில் சரக்கு லாரி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேடசந்தூரைச் சோ்ந்த காந்தி (47), சபுராபீவி (52), கருக்காம்பட்டியைச் சோ்ந்த பாப்பாத்தி (75), பழனியம்மாள் (60) உள்பட 10 போ் காயமடைந்தனா்.

விபத்து குறித்த கூம்பூா் போலீஸாா் விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com