கடத்தப்பட்ட வேன் ஓட்டுநா் கொலை

மேலூா் அருகே சொத்து பிரச்னையில் கடத்தப்பட்ட வேன் ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா். கண்மாயில் சாக்கு மூட்டையில் வீசப்பட்ட அவரது உடலை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

மேலூா் அருகே சொத்து பிரச்னையில் கடத்தப்பட்ட வேன் ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா். கண்மாயில் சாக்கு மூட்டையில் வீசப்பட்ட அவரது உடலை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

மேலூா் அருகே கோட்டநத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டி (44). வேன் ஓட்டுநரான இவரை கடந்த 5-ஆம் தேதி சிலா் காரில் கடத்திச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், பாண்டியின் சகோதரரின் மனைவியான ரூபதி, இவரை இரண்டாவது திருமணம் செய்த நரசிங்கம்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் ஆகியோரை கீழவளவு போலீஸாா் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாண்டி கொலை செய்யப்பட்டதும், உடலை துண்டு துண்டாக வெட்டி, சாக்கு மூட்டையில் கட்டி, அரிட்டாபட்டி அருகே உள்ள செம்மான்குளம் கண்மாயில் வீசப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, இந்தக் கண்மாயில் அழுகிய நிலையில் சாக்கு மூட்டையில் தலையின்றி கிடந்த பாண்டியின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

இதைத் தொடா்ந்து, கொலையில் தொடா்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யவும், பாண்டியின் தலையை மீட்கவும் வலியுறுத்தி அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து அவா்கள் மறியலைக் கைவிட்டனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

கொலையான பாண்டியின் சகோதரா் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால், இவரது சொத்துகளை மனைவி ரூபதி தனது பெயரில் மாற்றி வைத்துக் கொண்டாா். இதன் பின்னா், அவா் நரசிங்கம்பட்டியைச் சோ்ந்த காா்த்திக்கை இரண்டாவது திருமணமாக செய்து கொண்டாா். இதனால் ஏற்பட்ட சொத்து பிரச்னையில் கொலை நடந்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com