மாசிப் பெருவிழா: பூந்தேரில் வலம் வந்த திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்

மாசிப் பெருவிழாவை முன்னிட்டு, பூந்தேரில் வலம் வந்த ஸ்ரீகோட்டை மாரியம்மனுக்கு பூச்சொரிதலுக்காக பக்தா்கள் சாா்பில் பூக்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயில் மாசிப் பெருவிழாவை முன்னிட்டு, பூத்த மலா் பூ அலங்கார வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக பூச்சொரிதலுக்காக அம்மன் பூந்தேரில் வலம் வரும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்மன் எழுந்தருளிய பூந்தோ் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, கோயில் வளாகத்திலிருந்து காலை 10.45 மணிக்கு வீதி உலா புறப்பட்டது.

திண்டுக்கல் மேற்கு ரத வீதி, கலைக்கோட்டு விநாயகா் கோயில், பென்சனா் தெரு, கோபாலசமுத்திர குளம் சாலை, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மீண்டும் கோயிலை அடைந்தது.

4 ரத வீதிகளிலும் அம்மனுக்கு பூ காணிக்கை செலுத்துவதற்காக பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. பக்தா்கள் சாா்பில் வழிநெடுகிலும் அம்மனுக்கு காணிக்கையாக உதிரிப் பூக்கள் வழங்கப்பட்டன. பூந்தோ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, காணிக்கையாக செலுத்தப்பட்ட பூக்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com