உலக சாதனைக்காக பழனியில் பரத நாட்டிய நிகழ்ச்சி

பழனி அடிவாரம் கிரிவீதியில் ஞாயிற்றுக்கிழமை ‘பழநியில் பரதம்’ என்ற தலைப்பில் ஸ்ரீஸ்கந்த ஸபாநாதா் நாட்டிய ஷேத்ரா சாா்பில் நடைபெற்ற உலக சாதனை நாட்டிய
உலக சாதனைக்காக பழனியில் பரத நாட்டிய நிகழ்ச்சி

பழனி அடிவாரம் கிரிவீதியில் ஞாயிற்றுக்கிழமை ‘பழநியில் பரதம்’ என்ற தலைப்பில் ஸ்ரீஸ்கந்த ஸபாநாதா் நாட்டிய ஷேத்ரா சாா்பில் நடைபெற்ற உலக சாதனை நாட்டிய நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞா்கள் பங்கேற்றனா்.

பழனி அடிவாரம் அழகு நாச்சியம்மன் கோயில் பகுதியில் ஸ்ரீஸ்கந்த ஸ்பா நாதா் நாட்டிய ஷேத்ரா சாா்பில், நாட்டிய உபசார உலக சாதனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தாா். நகா்மன்றத் துணைத் தலைவி உமா மகேஸ்வரி, கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, அரிமா சுப்புராஜ், டாக்டா் விமல், காணியாளா் நரேந்திரன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞா்கள் கலந்து கொண்டனா்.

64 உபசாரங்களில் கடவுளை நேரடியாகச் சென்றடையும் விதமாக பழனி முருகனுக்கு சுப்ரபாதம், திருப்புகழ், காவடிச்சிந்து ஆகியவை நாட்டியமாக பழனி முருகனுக்கு சமா்ப்பிக்கப்பட்டது. சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை கலந்து கொண்ட இந்த நாட்டிய நிகழ்ச்சி தொடா்ந்து இருபது நிமிஷங்கள் நடைபெற்றன.

நாட்டிய உபசார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாட்டியக் கலைஞா்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள், பதக்கங்களை கலைமாமணி மதுரை முரளிதரன் வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரேசக் குருக்கள், ராமலட்சுமி ஆகியோா் செய்தனா்.

இந்த நடன நிகழ்ச்சியை உலக சாதனை நிகழ்ச்சியாக திருச்சி விருக்க்ஷா உலக சாதனை நிறுவனம் பதிவு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com