பேருந்து பழுது: இடையில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்

வேடசந்தூா் அருகே அரசுப் பேருந்து பழுதடைந்த நிலையில், பயணிகளை பாதியிலே இறக்கிவிட்டு மாற்றுப் பேருந்து கொண்டு வரப்பட்டு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டனா்.

வேடசந்தூா் அருகே அரசுப் பேருந்து பழுதடைந்த நிலையில், பயணிகளை பாதியிலே இறக்கிவிட்டு மாற்றுப் பேருந்து கொண்டு வரப்பட்டு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் இருந்து கோவிலூரை அடுத்த புளியம்பட்டிக்கு அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை சென்றது. அந்தப் பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பணிகள் இருந்தனா். இந்த நிலையில், அழகாபுரி பிரிவு அருகே சென்றபோது திடீரென பேருந்தை நிறுத்திய ஓட்டுநா், பேருந்தில் பழுது ஏற்பட்டதாகக் கூறி பயணிகளை இறங்குமாறு தெரிவித்தாா்.

மாற்றுப் பேருந்து வரும் வரை காத்திருக்குமாறு கூறிவிட்டு, அந்தப் பேருந்தை வேடசந்தூா் பணி மனைக்கு எடுத்துச் சென்றாா். அந்த வழித் தடத்தில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பேருந்து இயக்கப்படும் என்பதால், சுமாா் 30 நிமிஷங்களுக்கும் மேலாக பயணிகள் காத்திருந்தனா். இதனிடையே, மாற்றுப் பேருந்து கொண்டு வரப்பட்டு காத்திருந்த பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com