அரசுப்பள்ளி ஆண்டு விழா

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
அரசுப்பள்ளி ஆண்டு விழா

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதற்கு பள்ளித் தலைமையாசிரியா் பிரதீப் தலைமை வகித்தாா். பாலசமுத்திரம் பேரூராட்சித் தலைவி ராஜராஜேஸ்வரி, முத்தமிழ் கவிஞா் வைரபாரதி, பேரூராட்சி உறுப்பினா் வாணி உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா். ஆண்டு விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகத்துடன் இணைந்து வில்லேஜ் பெல்ஸ் நிறுவனத்தின் இயக்குநா்கள் கௌதம் கண்ணன், நிவேதா வெங்கடேசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். விழாவில், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் டெக்ஜேஸ், டீப்ஸ்பியா் ஏஐ நிறுவனத்தின் இயக்குநா் கீா்த்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினாா்.

விழாவில் நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இதில் திரளான வெளிநாட்டு மென்பொருள் வல்லுநா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com