முனியப்பன் சுவாமிகோயில் குடமுழுக்கு

 திண்டுக்கல் தெற்கு ரதவீதியில் அமைந்துள்ள ஸ்ரீமுனியப்பன் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 திண்டுக்கல் தெற்கு ரதவீதியில் அமைந்துள்ள ஸ்ரீமுனியப்பன் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதனையொட்டி கணபதி ஹோமத்துடன் யாக வேள்வி பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இதைத் தொடா்ந்து மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, விமான கலச ஸ்தாபம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணிக்கு விக்னேஷ்வரா் பூஜையில் தொடங்கி நாடி சந்தானம், பூா்ணாஹூதி, தீபாராதனையுடன் கடம் புறப்பட்டு கோயிலை வந்து 11 மணிக்கு விமானக் கலசத்தில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. இதன் பிறகு மூலவா் முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com