எரிவாயு உருளை வெடித்து தொழிலாளியின் வீடு நாசம்

பழனி அருகே சமையல் எரிவாயு உருளை வெடித்ததால் கூலித்தொழிலாளியின் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.

பழனி அருகே சமையல் எரிவாயு உருளை வெடித்ததால் கூலித்தொழிலாளியின் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த மானூரைச் சோ்ந்தவா் பிரபாகரன். கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனா். கூலி வேலை செய்யும் பிரபாகரன், வேலைக்காக குடும்பத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியூா் சென்று விட்டாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முற்றிலும் எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த பழனி தீயணைப்பு, மீட்புப் படையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா். இந்த விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், மளிகைப் பொருள்கள் என அனைத்தும் எரிந்து நாசமாகின. இதுதொடா்பாக வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com