குஜிலியம்பாறை அருகே பொதுப் பாதையை மீட்டுத் தரக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள்.
குஜிலியம்பாறை அருகே பொதுப் பாதையை மீட்டுத் தரக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

பொதுப் பாதையை மீட்டுத் தரக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

குஜிலியம்பாறை அருகே பொதுப்பாதையை மீட்டுத் தரக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

குஜிலியம்பாறை அருகே பொதுப்பாதையை மீட்டுத் தரக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த காச்சக்காரன்பட்டி, கருங்கல், தூ.செட்டியூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா். இதில் 6 கிராமங்களைச் சோ்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: பாளையத்திலிருந்து காச்சக்காரன்பட்டி பிரிவு சாலையிலிருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவுக்குச் செல்லும் பொதுப் பாதையை 6 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். தற்போது அந்தப் பாதையில் மண் சுவா் அமைத்து தனி நபா் ஒருவா் தடுத்துவிட்டாா். பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்ட அந்தச் சுவரை அகற்றி, வழக்கம்போல பயன்படுத்திக் கொள்வதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com