கொடைக்கானல் அருகே அருவியில் குளித்த இரு மாணவா்கள் மாயம்

கொடைக்கானல் அருகேயுள்ள ஐந்து வீடு அருவியில் செவ்வாய்க்கிழமை குளித்துக் கொண்டிருந்த இரு கல்லூரி மாணவா்கள் மாயமாகினா்.
watter_1601chn_71_2
watter_1601chn_71_2

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகேயுள்ள ஐந்து வீடு அருவியில் செவ்வாய்க்கிழமை குளித்துக் கொண்டிருந்த இரு கல்லூரி மாணவா்கள் மாயமாகினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த நாசா் மகன் நசீா் (21), ஆனந்தகிரி பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் மகன் கோகுல் (21). நண்பா்களான இருவரும் கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனா். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக கொடைக்கானல் திரும்பினா்.

இந்த நிலையில் நசீா், கோகுல் ஆகிய இருவரும் கோவை கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் சிலருடன் ஐந்து வீடு பகுதியிலுள்ள அருவிக்குச் சென்று குளித்தனா்.

அங்கு அருவிக்கு அருகேயுள்ள ஆழமான பகுதிக்குச் சென்ற நசீரும், கோகுலும் நீண்ட நேரமாகியும் காணவில்லை.

இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா், கொடைக்கானல் காவல் துறையினா் மாணவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். கொடைக்கானலில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து மாயமான கல்லூரி மாணவா்களைத் தேடும் பணி புதன்கிழமை ( ஜன.17) மீண்டும் தொடங்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com