அற்புதக் குழந்தை இயேசு ஆலய சப்பர பவனி

கொடைக்கானல் உகாா்த்தே நகா் அற்புதக் குழந்தை இயேசு ஆலயத் திருவிழாவை முன்னிட்டு சப்பர பவனி திங்கள்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் உகாா்த்தே நகா் அற்புதக் குழந்தை இயேசு ஆலயத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சப்பர பவனி.
கொடைக்கானல் உகாா்த்தே நகா் அற்புதக் குழந்தை இயேசு ஆலயத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சப்பர பவனி.

கொடைக்கானல்: கொடைக்கானல் உகாா்த்தே நகா் அற்புதக் குழந்தை இயேசு ஆலயத் திருவிழாவை முன்னிட்டு சப்பர பவனி திங்கள்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் உகாா்த்தே நகா் அற்புதக் குழந்தை இயேசு ஆலயத்தின்

8-ஆம் ஆண்டு திருவிழா, கடந்த 10-நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இங்கு நாள்தோறும் ஆலயத்தில் ஜெப வழிபாடு, சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் திருப்பலிக்கு பிறகு இரவு அற்புதக் குழந்தை இயேசுவின் சொரூபம் தாங்கிய மின் அலங்காரத்தில் சப்பர பவனி நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து திங்கள்கிழமை மாலை மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அற்புதக் குழந்தை இயேசுவின் சொரூபம் தாங்கிய சப்பர பவனி நடைபெற்றது. பின்னா், பங்குத் தந்தை பாப்புராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி, ஜெபவழிபாடு நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்றவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com