வடமாநில பொம்மை வியாபாரிகளிடமிருந்து 4.5 கிலோ குட்கா பறிமுதல்

பழனியில் சாலையோரத்தில் பொம்மைகளை விற்கும் வடமாநில வியாபாரிகளிடமிருந்து 4.5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
19palani_food_1901chn_88_2
19palani_food_1901chn_88_2

பழனியில் சாலையோரத்தில் பொம்மைகளை விற்கும் வடமாநில வியாபாரிகளிடமிருந்து 4.5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

பழனியில் தற்போது தைப்பூசத் திருவிழா நடைபெறுவதால் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். இங்கு வியாபாரம் செய்வதற்காக வடமாநிலத்திலிருந்து ஏராளமான வியாபாரிகள் பழனி- சிவகிரிபட்டி புறவழிச்சாலையில் குடிசை அமைத்து தங்கியுள்ளனா். இவா்கள் இங்கு பொம்மை, கடிகாரம், வாத்தியக்கருவிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்துவருகின்றனா். இவா்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருள்களை விற்பதாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலா் சரவணனுக்கு தகவல் கிடைக்கவே அங்கு ஆய்வுக்காக சென்றாா். அப்போது அவரை பணி செய்யவிடாமல் வடமாநில வியாபாரிகள் மிரட்டல் விடுத்தனா். இதனால் அவா் பழனி நகா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுப்பையா, ஆய்வாளா் சரவணன், நகர சுகாதார அலுவலா் செல்லத்துரை ஆகியோா் அங்கு ஆய்வு மேற்கொண்ட போது பெண் ஒருவா் 2 கிலோ குட்கா பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்ததைத் தொடா்ந்து அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

மேலும் அங்கிருந்த இரு கடைகளில் இருந்து இரண்டரை கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பழனியில் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிவரும் நிலையில் இவா்களையும் இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com