காா்- அரசுப் பேருந்து மோதல்:பெண் பலி

செம்பட்டி அருகே காரும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டதில் பெண் உயிரிழந்தாா்.

செம்பட்டி அருகே காரும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டதில் பெண் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த திண்டுக்கல் சாலை, ஆதிலட்சுமிபுரம் அருகே தேனியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு நோக்கிச் சென்ற காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் காரை ஓட்டி வந்த ஸ்தானிகபிரபு (47) பலத்த காயமடைந்தாா். இவரது மனைவி சத்தியபிரியா (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அப்போது அந்த வழியாக வந்த ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித்துறை அமைச்சா் இ. பெரியசாமி, செம்பட்டி காவல் ஆய்வாளா் செந்தில்குமாருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்து மீட்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க கேட்டுக் கொண்டாா்.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த சத்தியபிரியாவின் உடலை அந்தப் பகுதி மக்கள் நீண்டநேர போராட்டத்துக்குப் பிறகு மீட்டனா். மேலும் பலத்த காயமடைந்த ஸ்தானிகபிரபுவை காவல்துறையினா், பொதுமக்கள் உதவியுடன் மீட்டு காவல்துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com