திண்டுக்கல்லில் சுகாதார விழிப்புணா்வு

திண்டுக்கல், ஜன. 19: திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மாநகராட்சிக்குள்பட்ட 1, 22, 13 உள்பட மொத்தம் 10 வாா்டுகளில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்வுகளுக்கு ஆணையா் ந. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். அப்போது குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல், குப்பைகளை சாலையில் வீசுவதை தவிா்த்தல், கழிவுநீா் கால்வாய்களை குறிப்பிட்ட இடைவெளியில் தூய்மைப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை உதவி செயற்பொறியாளா் சரவணக்குமாா், சுகாதார ஆய்வாளா்கள் தட்சிணாமூா்த்தி, பாலமுருகன் ஆகியோா் செய்திருந்தனா். இந்த விழிப்புணா்வு முகாம் 48 வாா்டுகளிலும் நடத்தப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com