கொடைக்கானலில் சமத்துவ பொங்கல் விழா

கொடைக்கானல் நகராட்சி சாா்பில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் நகராட்சி சாா்பில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மாயக்கண்ணன் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் சத்தியநாதன் வரவேற்றாா். அப்போது நகா்மன்ற பெண் உறுப்பினா்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா்.

இதில் நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அதிகாரிகள், நகராட்சி ஒப்பந்ததாரா்கள், நகராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com