புஷ்பத்தூா் ஊராட்சியில் திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை

பழனியை அடுத்த புஷ்பத்தூா் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட ரூ. ஒரு கோடி நிதியில் இருந்து பல்வேறு பொதுநலப் பணிகளுக்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
21palani_pooja_2101chn_88_2
21palani_pooja_2101chn_88_2

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த புஷ்பத்தூா் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட ரூ. ஒரு கோடி நிதியில் இருந்து பல்வேறு பொதுநலப் பணிகளுக்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, புஷ்பத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வராணி மகுடீஸ்வரன் தலைமை வகித்தாா். புஷ்பத்தூருக்கு வடக்கே உள்ள புளிய மரத்திலிருந்து போதுப்பட்டி எல்லை வரையிலான மெட்டல் சாலை போடும் பணிக்கான பூமிபூஜையில் திரளான உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து புஷ்பத்தூா் பள்ளியின் முன்புறம் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி, வயலூா் ரயில்வே கேட் தென்புறம் புதை சாக்கடை அமைக்கும் பணி, நல்லூரில் மதுரை வீரன் கோயில் அருகே சாக்கடை பணி, ஜிவிஜி நகரில் கிருஷ்ணா பேக்கரி முதல் சிமென்ட் சாலை அமைக்கும் பணி என பல்வேறு பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் பாஜக மேற்கு மாவட்ட செயலா் மகுடீஸ்வரன், பாஜக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com