திருவள்ளுவா் தின விழா போட்டிகள்: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள்

திருவள்ளுவா் தின விழாவையொட்டி, மதுரை தானம் கல்வி நிலையம் சாா்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

திருவள்ளுவா் தின விழாவையொட்டி, மதுரை தானம் கல்வி நிலையம் சாா்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரை மேலக்கால் அருகே உள்ள டி.மலைப்பட்டியில் உள்ள தானம் கல்வி நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்வி நிலைய இயக்குநா் அ.குருநாதன் தலைமை வகித்தாா். துணை இயக்குநா் தியாகராசன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக தானம் கல்வி நிலைய அறங்காவலா் ச. வெங்கடேசன், திட்ட மேலாளா் முனிராம் சிங் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தானம் கல்வி நிலையத்தைச் சுற்றியுள்ள கொடிமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி, அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி, விக்கிரமங்கலம் அரசு கள்ளா் உயா்நிலைப் பள்ளி, காடுபட்டி, அரசு நடுநிலைப் பள்ளி, பன்னியான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கச்சிராயிருப்பு நரேந்திரா மெட்ரிகுலேசன் பள்ளி, திருவேடகம் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி மாணவ மாணவிகள் 170 போ் கலந்து கொண்டனா்.

மாணவா்களுக்கு திருக்கு ஒப்புவித்தல், கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் ‘நீரின்றி அமையாது உலகு’, ‘வறுமை கல்வி கற்க தடையில்லை’ என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டியும், ‘மனிதநேயம் காப்போம்’, ‘துரித உணவு தரும் துரித நோய்’, ‘விழிப்பான இந்தியா’ ஆகிய தலைப்புகளில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.

தொடா்ந்து இரவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தென்கரை ஊராட்சி மன்றத் தலைவா் ஐ. மஞ்சுளா சிறப்பு விருந்திரனராகப் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நினைவுப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தானம் கல்வி நிலைய துணை இயக்குநா் லோகநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com