மாயவபெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம்

அயோத்தி ராமா் கோயிலில் பிராணப் பிரதிஷ்டையை முன்னிட்டு, பழனி அருகே புஷ்பத்தூரில் அமைந்துள்ள மாயவ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்கார பூஜைகள், அன்னதானம் நடைபெற்றன.
பழனியை அடுத்த புஷ்பத்தூரில் அமைந்துள்ள மாயவபெருமாள் கோயிலில் திங்கள்கிழமை அன்னதானத்தை தொடங்கிவைத்த பாஜக மாவட்ட தலைவா் கனகராஜ்.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மகா தீபாராதனையைத் தொடா்ந்து, காளியம்மன் கோயில் வளாகத்தில் பெண்கள் கும்மியாட்டம் ஆடினா். தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட பாஜக மாவட்ட தலைவா் கனகராஜ், மாவட்ட செயலா் மகுடீஸ்வரன் உள்ளிட்டோா் அன்னதானத்தை தொடங்கி வைத்தனா்.

பின்னா், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இரவு வண்ணமயமான வாணவேடிக்கையும் நடைபெற்றது.

இதில், புஷ்பத்தூா், வயலூா் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com