சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாச நாதருக்கும், நத்திகேஸ்வரருக்கும் பிரதோஷத்தை முன்னிட்டு, 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.

இதேபோல, அபிராமி அம்மன் கோயிலில் உள்ள பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா், நந்தீஸ்வரா் சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. கோயில் உள்பிரகாரத்தில் அம்பாளுடன் சுவாமி வலம் வந்து அருள்பாலித்தாா்.

முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், தவசிமடை மகாலிங்கேஷ்வா் கோயில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மெளன குருசாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com