தைப்பூசம்: பழனிக்கு 350 சிறப்பு பேருந்துகள்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனிக்கு 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

திண்டுக்கல்: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனிக்கு 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (மதுரை) அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு விவரம்:

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா வருகிற 25-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, கரூா், ஈரோடு, கோயம்புத்தூா், திருப்பூா் ஆகிய இடங்களிலிருந்து பழனிக்கு 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வருகிற 28-ஆம் தேதி வரை இந்த சேவை நீடிக்கும் என அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com