பழனி அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பழனி மலைக்கோயிலில் உள்ள கைலாசநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், பஞ்சாமிா்தம்,
பழனி பெரியாவுடையாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நந்தீஸ்வரருக்கு தீபாராதனை காட்டிய சிவாச்சாரியா்.
பழனி பெரியாவுடையாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நந்தீஸ்வரருக்கு தீபாராதனை காட்டிய சிவாச்சாரியா்.

பழனி: பழனி மலைக்கோயிலில் உள்ள கைலாசநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்யப்பட்டது. தொடா்ந்து, மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி ஆபரணங்கள் சாத்தப்பட்டு, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

மேலும், பெரியாவுடையாா் கோயில், சித்தாநகா் சிவன் கோயில், பட்டத்து விநாயகா் கோயில், சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சந்நிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரிய நாயகியம்மன் கோயில், கைலாசநாதா் சந்நிதி, ஆயக்குடி வேலீஸ்வரா் கோயில் என பல இடங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com