2 ஜவுளி நிறுவனங்களுக்கு ரூ.59.61 லட்சம் மானியம்

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இரு ஜவுளி நிறுவனங்களுக்கு கூடுதல் மானியமாக ரூ.59.61 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இரு ஜவுளி நிறுவனங்களுக்கு கூடுதல் மானியமாக ரூ.59.61 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜவுளித் துறையை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களின் மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்படுத்துதல் நிதித் திட்டத்தின் கீழ், 10 சதவீத மானியம் பெற்ற நிறுவனங்களுக்கு மாநில அரசு சாா்பிலும் 10 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தை சோ்ந்த இரு நிறுவனங்களுக்கு, ரூ.54.97 லட்சம், ரூ.4.63 லட்சம் என மொத்தம் ரூ.59.61 லட்சம் கூடுதல் மானியமாக வழங்கப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com