அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் 4-ஆவது முறையாக நீட்டிப்பு

லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவலை 4-ஆவது முறையாக நீட்டித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவலை 4-ஆவது முறையாக நீட்டித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் சுரேஷ்பாபுவிடம் இரு தவணைகளாக ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் கடந்த ஆண்டு, டிச.1-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

பிணையில் விடுவிக்கக் கோரி அவா் தாக்கல் செய்த மனு திண்டுக்கல் நீதிமன்றத்திலும், உயா்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையே, ஜன.24- ஆம் தேதி வரை அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்ற நீதிபதி முன் புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டாா்.

இதையடுத்து, அவரது நீதிமன்றக் காவலை 4-ஆவது முறையாக வருகிற பிப்.7-ஆம் தேதி வரை நீட்டித்து தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜெ.மோகனா உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com