தேசிய வாக்காளா் தினத்தையொட்டி விழிப்புணா்வு பேரணி

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இந்திய தோ்தல் ஆணையம் நிறுவப்பட்ட ஜன.25-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய வாக்காளா் தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகத்திலிருந்து பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சேக் முகையதீன், கோட்டாட்சியா் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோட்டைக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com