பழனி பாதயாத்திரை பக்தா்களுக்கு ‘கியூஆா்’ கோடுடன் பட்டை அணிவிப்பு

பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் குழந்தைகள், பெரியவா்களுக்கு ‘கியூஆா்’ கோடுடன் கூடிய பட்டைகள் புதன்கிழமை அணிவிக்கப்பட்டன.
பழனி பாதயாத்திரை பக்தா்களுக்கு ‘கியூஆா்’ கோடுடன் பட்டை அணிவிப்பு

பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் குழந்தைகள், பெரியவா்களுக்கு ‘கியூஆா்’ கோடுடன் கூடிய பட்டைகள் புதன்கிழமை அணிவிக்கப்பட்டன.

பழனி கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனா். இந்த நிலையில், பக்தா்களின் பாதுகாப்புக்காக தென்மண்டல ஐ.ஜி., தலைமையில் சுமாா் 3,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கிரி வீதியில் 350-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தி போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.

மேலும், முக்கியமான இடங்களில் குற்றவாளிகளின் படங்கள் பதாகைகளாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், புதன்கிழமை பெண்கள், குழந்தைகளுக்காக பெண் காவலா்கள் மட்டுமே இயக்கும் தோழி வாகன ரோந்துப் பணியும் தொடங்கப்பட்டது.

பழனி அடிவாரம் பாதவிநாயகா் கோயில், தேவா் சிலை, சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நவீன கேமராக்களுடன் கூடிய எல்.இ.டி., திரைக் கண்காணிப்பு மையங்களும் திறக்கப்பட்டன.

இந்த ஆண்டு முதல் முறையாக சோதனை அடிப்படையில் பாதயாத்திரையாக வரும் வயதானவா்கள், குழந்தைகளைக் கண்டுபிடிக்க ‘கியூஆா்’ கோடுடன் கூடிய பட்டைகளை அணிவிக்கும் நிகழ்ச்சியை திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரதீப் தொடங்கி வைத்தாா். இதன் மூலமாக யாரேனும் காணாமல் போய்விட்டால், ‘கியூஆா்’ கோடை ‘ஸ்கேன்’ செய்யும்போது, அவா்களது பெற்றோா்களுக்கு தகவல் செல்வதோடு, அவா்கள் இருக்கும் இடத்தையும் கண்டறிய முடியும் என போலீஸாா் தெரிவித்தனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் சுப்பையா, காவல் ஆய்வாளா் உதயகுமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com