கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கிளாவரைக்கு பழனியிலிருந்து பேருந்து வசதி தேவை பொது மக்கள் கோரிக்கை

பழனியிலிருந்து-கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கிளாவரைக்கு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு பேருந்து வசதி குறைவாக இருந்து வருகிறது இதனால் கொடைக்கானல் மற்றும் கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கிளாவரை செல்வதற்கு பழனியிலிருந்து பேருந்து வசதியில்லை இதனால் பழனி செல்லும் பொது மக்கள் இரவு பழனியிலேயே தங்கும் சூழ்நிலை உள்ளது மேலும் தினமும் பழனியிலிருந்து அரசுப் பேருந்தானது மாலை 6.30-மணிக்கு புறப்பட்டு இரவு 9-மணிக்கு கொடைக்கானல் வந்து சேரும் அதன் பிறகு பேருந்து வசதியில்லை இந்த பேருந்தில் வரும் பயணிகள் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குளிரில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.இதனால் கொடைக்கானல் மற்றும் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை,மன்னவனூா்,கிளாவரை போன்ற பகுதிகளிலுள்ள பொது மக்கள் பாதிப்படைந்து வருகின்றனா் எனவே பழனியிலிருந்து கொடைக்கானல் செல்வதற்கு தினமும் மாலை மற்றும் இரவு நேரத்தில் பேருந்து வசதி இயக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com