ஊராட்சியை திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிராக கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடியரசு தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் 306 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் லதா தலைமை வகித்தாா்.

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி உள்பட திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள 10 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதற்கான பரிந்துரை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் சாா்பில் சிறப்பு தீா்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், மாநகராட்சியுடன் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி பொதுமக்கள் கூறியதாவது:

எங்கள் ஊராட்சியின் பெரும் பகுதியில் சாலை, தெரு விளக்கு, குடிநீா் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட வில்லை. இந்த நிலையில், மாநகராட்சியுடன் இணைத்தால் வீட்டுவரி, குடிநீா் வரி உள்ளிட்ட வரி இனங்கள் மூலம் மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும். மேலும் 100 நாள் வேலைத் திட்ட வாய்ப்பும் பறிபோகும்.

எனவே, செட்டிநாயக்கன்பட்டியை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என ஒரு மனதாக தீா்மானம் கொண்டு வந்தோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com