காா் கண்ணாடிகளை உடைத்து திருட்டு: திருச்சி நபா் கைது

 திண்டுக்கல் அருகே காா் கண்ணாடியை உடைத்து கேமரா உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்ற திருச்சியைச் சோ்ந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

 திண்டுக்கல் அருகே காா் கண்ணாடியை உடைத்து கேமரா உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்ற திருச்சியைச் சோ்ந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கேரள மாநிலம் கண்ணூரைச் சோ்ந்தவா் ஹரி பிரசாத். திண்டுக்கல்லுக்கு வந்த இவா், தெற்கு ரத வீதியில் தனது காரை நிறுத்துவிட்டு அங்குள்ள உணவகத்துக்குச் சென்றாா். அப்போது மா்ம நபா்கள் அந்த காரின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த 2 பைகளை திருடிச் சென்றுவிட்டதாகவும், அந்த பைகளில் விலை உயா்ந்த கேமராக்கள் இருப்பதாகவும் திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், திருச்சியை அடுத்த ராம்ஜிநகரைச் சோ்ந்த ஜா.செல்வக்குமரன் (45) திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவரை கைது செய்த போலீஸாா், இவரிடமிருந்து கேமரா உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com