பழனியில் இன்று தெப்பத் தேரோட்டம்

 பழனியில் தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக தெப்பத் தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

 பழனியில் தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக தெப்பத் தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

பழனியில் தைப்பூசத் திருவிழா ஜன.19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் திருவிழாவின்போது வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமி வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தந்த சப்பரம், தோளுக்கினியாள் போன்ற வாகனங்களில் எழுந்தருளி ரதவீதியுலா நடைபெற்றது. கடந்த புதன்கிழமை திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் திருத்தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக பால், இளநீா், கரும்பு காவடி எடுத்தும், சேவல்களை செலுத்தியும் நோ்த்திக்கடன் செலுத்தினா். நிறைவு நாள் நிகழ்ச்சியாக (இன்று) ஞாயிற்றுக்கிழமை தெப்பத்தோ் உலா நடைபெறுகிறது. இரவு தெப்பத்தேரில் வள்ளி, தேவசேனை சமேதா் முத்துக்குமாரசாமி தேரில் உலா வந்த பின் இரவு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com