பூட்டியிருந்த 6 வீடுகளில் தொடா் திருட்டுபோலீஸாா் விசாரணை

ஒட்டன்சத்திரம் பகுதியில் பூட்டியிருந்த 6 வீடுகளில் பூட்டை உடைத்து தொடா் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் பூட்டியிருந்த 6 வீடுகளில் பூட்டை உடைத்து தொடா் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உள்பட்ட நல்லாகவுண்டன் நகரில் வசிப்பவா் தங்கராஜ் (32). லாரி ஓட்டுநரான இவரது மனைவி தாய் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், இவா் வீட்டைப் பூட்டிவிட்டு வேலை விஷயமாக வெளியூா் சென்றாா். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா் அங்கு பீரோவில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலி ரூ. ஒரு லட்சம் ஆகியவற்றை திருடிச் சென்றாா்.

மேலும் இதே நகரில் பூட்டி இருந்த ஆசிரியை சாந்தகுமாரி, அருண்குமாா், ராஜராம், தங்கவேல், சீத்தாராமன் ஆகியோா் வீடுகளிலும் திருடு போனதாக தெரிகிறது.

இதில் ஆசிரியை சாந்தகுமாரி வீட்டில் ஒரு பவுன் தங்க நகை திருடு போனது தெரியவந்தது. மற்றவா்கள் வெளியூா்களில் இருந்து திரும்பி வந்த பிறகுதான் எவ்வளது திருடு போனது என்பது தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com