கொடைக்கானலில் பனிப் பொழிவு அதிகரிப்பு

pani_polivu_2801chn_71_2
pani_polivu_2801chn_71_2

படவிளக்கம். 1. பனிப் பொழிவு.

கொடைக்கானலில் அதிகரித்து வரும் பனிப் பொழிவால் ஏரிச் சாலைப் பகுதியிலுள்ள புல்களில் படா்ந்துள்ள உறை பனி.

2. டூரிஸ்ட்.

கொடைக்கானல் பைன் பாரஸ்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

கொடைக்கானல், ஜன. 28: கொடைக்கானலில் பகல் நேரங்களிலும் பனிப் பொழிவு அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பொதுவாக நவம்பா் மாதம் முதல் பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி வரை பனிப் பொழிவு காலமாகும். ஆனால், நிகழாண்டில் பருவ நிலை மாற்றம் காரணமாக, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மழை பெய்தது.

தற்போது மழை குறைந்துள்ள நிலையில், கடந்த 2 வாரங்களாக பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது.

இதனால், ஏரிச் சாலை, செண்பகனூா், அப்சா்வேட்டரி, அட்டக்கடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள புல்கள், செடிகளில் பனிப் பொழிவு காணப்படுகிறது.

மாலை 4 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் காலை 8 மணி வரை தொடா்ந்து குளிா் நிலவி வருவதோடு இரவு, அதிகாலை நேரங்களில் உறை பனியும் நிலவுகிறது. இவற்றை சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனா்.

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: தொடா் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் கடந்த 4 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாகக் காணப்பட்டது. சுற்றுலா இடங்களான கோகா்ஸ்வாக், பைன் பாரஸ்ட், வெள்ளிநீா் வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, தவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துக் காணப்பட்டனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com