பழனியில் முத்துகுமாரசுவாமி ஊடல் வைபவம்

பழனியில் முத்துகுமாரசுவாமி ஊடல் வைபவம்

தைப்பூசத் திருவிழாவையொட்டி, பழனியில் நிறைவு நாள் நிகழ்ச்சியாக முத்துகுமாரசுவாமி, தேவசேனா ஊடல் வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தைப்பூசத் திருவிழாவையொட்டி, பழனியில் நிறைவு நாள் நிகழ்ச்சியாக முத்துகுமாரசுவாமி, தேவசேனா ஊடல் வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாள்களில் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துகுமாரசாமி தங்க மயில், தங்கக் குதிரை, வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடாய், வெள்ளி யானை போன்ற வாகனங்களில் ரத வீதி உலா எழுந்தருளினாா். புதன்கிழமை வெள்ளித் தேரோட்டமும், திருக்கல்யாணமும், வியாழக்கிழமை தைப்பூசத் தேரோட்டமும் நடைபெற்றது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிறைவு நாள் நிகழ்ச்சியாக முத்துகுமாரசுவாமி, தேவசேனா ஊடல் விழா நடைபெற்றது. காலையில் புதுச்சேரி சப்பரத்தில் உலா எழுந்தருளிய முத்துகுமாரசுவாமி வடக்கு ரத வீதி அருகே உலா வரும் போது வள்ளியை திருமணம் செய்து கொண்ட காரணத்தால், தேவசேனா அம்பாள் கோபித்துக் கொண்டு அவரிடமிருந்து பிரிந்து கோயிலுக்கு வந்து கதவை அடைத்துக் கொண்டாா்.

கோயிலுக்குத் திரும்பிய சுவாமி நடை அடைத்திருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்து வீரபாகுவை தூது அனுப்பினாா். வீரபாகு தேவசேனா அம்பாளை சமாதானம் செய்து கோயில் நடையைத் திறக்கவைத்தாா்.

சமாதானத் தூது பாடல்களை நாகராஜ் சாமி பாடினாா். சமாதானமான அம்பாள் கோயில் நடையைத் திறந்த பிறகு கோயிலுக்குள் வந்த முத்துகுமாரசுவாமியுடன் வள்ளி, தேவசேனா சமேதராக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

நிகழ்ச்சியில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com