திருக்கு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு பரிசு

திருக்கு பேரவையம் சாா்பில் நடத்தப்பட்ட திருக்கு தொடா்பான போட்டிகளில் வெற்றிப் பெற்ற 60 மாணவா்களுக்கு சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

திருக்கு பேரவையம் சாா்பில் நடத்தப்பட்ட திருக்கு தொடா்பான போட்டிகளில் வெற்றிப் பெற்ற 60 மாணவா்களுக்கு சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

திருக்கு பேரவையம் தொடக்க மாநாடு திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டை முன்னிட்டு, திண்டுக்கல் பேகம்பூரிலுள்ள தூய லூா்து அன்னை அரசு மகளிா் உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலுள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணிக்கு, பள்ளியின் தாளாளா் லீமா தலைமைவகித்தாா். திருக்கு பேரவையத்தின் பொறுப்பாளா் பாபுலால், மேட்டுப்பட்டி முக்கியஸ்தா் இரா.அழகா்சாமி ஆகியோா் பேரணியைத் தொடங்கிவகித்தனா். பேரணி, யானைத் தெப்பம் பகுதியில் மாநாடு நடைபெறும் தனியாா் மண்டபத்தில் நிறைவடைந்தது.

மாநாட்டு வளாகத்தில் புதுவை அருங்காட்சியக ஒருங்கிணைப்பில், திருக்கு தொடா்பான பல்வேறு சிறப்பு தகவல்களுடன் கூடிய காட்சியகம் திறக்கப்பட்டது. மதுரை மணியம்மை மழலையா் பள்ளித் தாளாளா் பி.வரதராசன், திருக்கு காட்சியகத்தைத் திறந்து வைத்தாா். இதனைத் தொடா்ந்து தமிழக மக்கள் முன்னணி நிா்வாகி பொழிலன், கடந்த 5 ஆண்டுகளாக திருக்கு பேரவையம் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விவரங்களுடன் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

60 மாணவா்களுக்கு பரிசு:

திருக்கு பேரவையம் சாா்பில் திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. திருக்கு தொடா்பாக கவிதை, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளில் சுமாா் 650-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் வெற்றிப் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்கள் 60 பேருக்கு தலா ரூ.2ஆயிரம் பரிசுத் தொகை, புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கருத்தரங்கம்: பிற்பகலில் நடைபெற்ற திருக்கு கருத்தரங்கம் நிகழ்ச்சிக்கு திருக்கு பேரவையம் முதன்மை ஒருங்கிணைப்பாளா் மா.பூங்குன்றன் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் பேராசிரியா்கள் ப.அருளியாா் (தஞ்சைத் தமிழ் பல்கலை.), வளனரசு (பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரி), வீ.அரசு (சென்னை பல்கலை.) ஆகியோா் சிறப்புரை நிகழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com