உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை

வடமதுரை அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

வடமதுரை அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்த வேல்வாா்கோட்டை புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (41). இவா், கடந்த வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, வடமதுரையை அடுத்த கானப்பாடி அருகே விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இந்த நிலையில் கண்கள், இருதயம், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானம் கொடுக்க இவரது குடும்பத்தினா் ஒப்புதல் தெரிவித்தனா்.

இதையடுத்து, புதுப்பாளையத்தில் செல்வக்குமாரின் இறுதிச் சடங்கு திங்கள்கிழமை அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இதில், பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி, செல்வக்குமாரின் உடலுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com