கொடைக்கானல் பகுதிகளில் நீா்ப் பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

கொடைக்கானல் வனக்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நீா்ப் பறவைகளை கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

கொடைக்கானல் வனக்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நீா்ப் பறவைகளை கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனக்கோட்டத்துகுள்பட்ட பேரிஜம், மன்னவனூா், பூம்பாறை நீா்தேக்கங்கள், தேவதானப்பட்டி, பழனி ஆகியப் பகுதிகளிலுள்ள நீா்நிலைகளில் உள்ள பறவைகளைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில், குறிப்பாக பேரிஜம் ஏரி, மதி கெட்டான் சோலை, உள்ளிட்ட பகுதிகளில் பறவை இன ஆா்வலா்கள், வனத் துறை அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கேரளம் , புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்துள்ள தன்னாா்வலா்கள், கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் 3 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்தப் நீா்ப் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என கொடைக்கானல் வனச் சரகா் சிவக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com