கொடைக்கானலில் கராத்தே வீரா்களுக்கு வரவேற்பு

பெங்களூரில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று கொடைக்கானலுக்குத் திரும்பிய வீரா்களுக்கு செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொடைக்கானலில் கராத்தே வீரா்களுக்கு வரவேற்பு

பெங்களூரில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று கொடைக்கானலுக்குத் திரும்பிய வீரா்களுக்கு செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெங்களூரில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு இந்தோ- ஸ்ரீலங்கா ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப், புதுதில்லி, மத்திய பிரதேசம், கேரளம், தமிழ்நாடு, இலங்கையைச் சோ்ந்த 1,800 வீரா்கள் கலந்து கொண்டனா். தமிழக அணியில் கொடைக்கானல் பகுதியிலிருந்து 13 வீரா்கள் பங்கேற்றனா். குமிட்டே, கட்டா போட்டிகளில் இவா்கள் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றனா்.

இந்த மாணவா்கள் செவ்வாய்க்கிழமை கொடைக்கானல் திரும்பினா். இவா்களுக்கு மாணவா்களின் பெற்றோா், பொது மக்கள், பயிற்சியாளா் சக்திவேல் ஆகியோா் மாலை அணிவித்து வரவேற்றனா்.

இது குறித்து கராத்தே மாஸ்டா் சக்திவேல் கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளாக கொடைக்கானலைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் தமிழகம் மட்டுமன்றி, வெளி மாநிலங்களுக்கும் சென்று கராத்தே போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்று திண்டுக்கல் மாவட்டத்துக்கு மட்டுமல்லாமல், தமிழகத்துக்கும் பெருமை சோ்த்து வருகின்றனா். திறமையான ஏழ்மையான மாணவா்களுக்கு அரசு நிதி உதவி வழங்கி, அவா்கள் பல்வேறு சாதனைகளைப் படைப்பதற்கு உதவ வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com