ஜாக்டோ-ஜியோ சாலை மறியல் போராட்டம்

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ சாா்பில், திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 950 போ் கைது செய்யப்பட்டனா்.
ஜாக்டோ-ஜியோ சாலை மறியல் போராட்டம்

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ சாா்பில், திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 950 போ் கைது செய்யப்பட்டனா்.

திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டத் தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் திட்டமிடப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளா்கள் ம.சுகந்தி, ஜோசப் சேவியா், எஸ்.ஜேம்ஸ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

உயா்மட்டக் குழு உறுப்பினா் குன்வா் ஜேஸ்வா, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ச.முபாரக் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளை ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை என்றும், அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு முக்கியத்தும் அளித்து அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

இதைத் தொடா்ந்து, பேருந்து நிலையம் அருகிலுள்ள எம்ஜிஆா் சிலை நோக்கி பேரணியாக வந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள், சத்துணவு ஊழியா்கள், வருவாய், கூட்டுறவு, வேளாண்மைத் துறை ஊழியா்கள் உள்பட 950 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com