தனியாா் மயத்துக்கு வழிவகுக்கும் அரசாணைகளை நீக்க வலியுறுத்தல்

தனியாா் மயத்துக்கு வழிவகுக்கும் அரசாணைகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலா்கள்,

தனியாா் மயத்துக்கு வழிவகுக்கும் அரசாணைகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், உள்ளாட்சிப் பணியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவா் தபாா்த்தசாரதி, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்டத் தலைவா் ஆ.லூ.சலேத்ராஜா ஆகியோா் தலைமை வகித்தனா்.

தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்து பிரிவுகளிலுள்ள காலிப் பணியிடங்களையும், பதவி உயா்வுகளையும் வழங்க வேண்டும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனியாா் மயத்துக்கு வழிவகுக்கும் அரசாணைகளை (எண் 10, 152, 139) உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com