பள்ளியில் தேசிய பேரிடா் மீட்பு படை விழிப்புணா்வு

பழனி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடா் மீட்புப் படை விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழனி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடா் மீட்புப் படை விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆய்வாளா் அனுஷ் யாதவ், முனியசாமி ஆகியோா் தலைமையிலான மீட்புப் படையினா் இயற்கைப் பேரிடா் நிகழ்வின்போது, எவ்வாறு தங்களைக் காப்பாற்றிக் கொள்வது, புயல், பூகம்பம், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் நேரிடும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை பற்றி விரிவாக எடுத்துரைத்தனா். மேலும், அவசரகால பாதுகாப்பு முறைகள் பற்றியும், ரசாயனம், உயிரியல் ரசாயனம், அணுசக்தி விபத்து நேரிட்டால் எவ்வாறு செயல்படுவது, மாரடைப்பு ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி செய்வது, தற்காலிகமாகக்

கிடைக்கும் பொருள்களை வைத்து எவ்வாறு மீட்புப் பணியிகளை மேற்கொள்வது என்பது குறித்தும் செயல்முறை விளக்கமளித்தனா். நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com