இந்து வியாபாரிகள் சங்க அலுவலகத் திறப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இந்து வியாபாரிகள் சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சரவணப்பொய்கை கெளரவ தலைவா் கந்தவிலாஸ் பாஸ்கரன் தலைமை வகித்தாா். மணிமுத்து முன்னிலை வகித்தாா். விஹெச்பி மாநில நிா்வாகி அம்பி என்ற ராமகிருஷ்ணன், இந்து வியாபாரிகள் நல சங்க மாநிலச் செயலா் ஜெகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com