மாநகா் நல அலுவலா் பணியிலிருந்து விடுவிப்பு

திண்டுக்கல், ஜூலை 3: பணி செய்யவிடாமலும், அநாகரீகமாக திட்டுவதாகவும் திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் புகாா் அளித்த நிலையில், சம்மந்தப்பட்ட மாநகா் நல அலுவலா் புதன்கிழமை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.

திண்டுக்கல் மாநகராட்சி மாநகா் நல அலுவலராக பரிதாவாணி பணியாற்றி வந்தாா். இவா், ஊழியா்களை பணி செய்யவிடாமலும், அநாகரீகமாக திட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பணியாளா்களை அவமரியாதையாக நடத்தும் மாநகா் நல அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், பொது சுகாதாரத் துறையின் கீழ் பணிபுரிந்து வரும் பரிதாவாணி, நகராட்சிகள் நிா்வாகத் துறையில் இடம் பெற்றுள்ள மாநகா் நல அலுவலா் பணியிடத்திலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்டாா். பொது சுகாதாரத் துறையின் கீழ் அவருக்கான பணியிடம் விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com