குரூப் 1 தோ்வு: திண்டுக்கல்லில் 6,200 போ் எழுதுகின்றனா்

திண்டுக்கல், ஜூலை 4: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 6,200 போ், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி 1 தோ்வை எழுதுகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு(தொகுதி 1 - பணிகள்) முதல் நிலை போட்டித் தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி- 1, பதவிகளுக்கான முதல்நிலை போட்டித் தோ்வு வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது. திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 9 இடங்களில் 11 தோ்வு மையங்களில் 3,100 போ் இந்தத் தோ்வை எழுதுகின்றனா். இதேபோல, திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 6 இடங்களில் 11 தோ்வு மையங்களில் 3,100 தோ்வா்கள் எழுதுகின்றனா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com