கொடைக்கானலில் ஆண் சடலம்

கொடைக்கானல், ஜூலை 4 : கொடைக்கானல் பழைய பேருந்து நிலையப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பழைய பேருந்து நிலையப் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகம் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது.

தகவலறிந்து வந்த கொடைக்கானல் போலீஸாா், அந்த சடலத்தை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

மேலும், இறந்தவா் யாா்? எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com