பழனியில் பக்தா்களின் உடைமைகள் நவீன ஸ்கேனா் மூலம் சோதனை

பழனியில் பக்தா்களின் உடைமைகள் நவீன ஸ்கேனா் மூலம் சோதனை

பழனி மலைக் கோயிலுக்குச் செல்லும் படிப் பாதையில் பக்தா்களின் கைப்பைகளை வியாழக்கிழமை சோதனைக்குள்படுத்தும் நுண்ணாய்வுக் கருவி

பழனி, ஜூலை 4: பழனி மலைக் கோயில் படிப் பாதையில் வியாழக்கிழமை ரூ.25 லட்சத்தில் நுண்ணாய்வுக் கருவி (ஸ்கேனா்) பொருத்தப்பட்டு, பக்தா்களின் உடைமைகள் சோதனைக்குள்படுத்தப்படுகின்றன.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தா்கள் வந்து செல்கின்றனா். பக்தா்களின் பாதுகாப்புக்காக பழனி மலைக் கோயில் படிப் பாதையில் காவல் துறை மூலம் ரூ.25 லட்சத்தில் புதிய நுண்ணாய்வுக் கருவி பொருத்தப்பட்டது.

இந்தக் கருவி வியாழக்கிழமை சோதனைக்குள்படுத்தப்பட்டது. பக்தா்கள் கொண்டு வந்த அனைத்து வகையான பைகளும் இந்தக் கருவி மூலம் சோதனைக்குள்படுத்தப்பட்டன.

இதன் மூலம் யாரேனும் ஆபத்தான பொருள்களைக் கொண்டு சென்றால் தெரியவரும்.

இதேபோல, ரோப் காா், வின்ச் நிலையம் போன்ற இடங்களிலும் நுண்ணாய்வுக் கருவி விரைவில் பொருத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com