சேதமடைந்த சாலையைச்
சீரமைத்து வரும் பொதுமக்கள்

சேதமடைந்த சாலையைச் சீரமைத்து வரும் பொதுமக்கள்

கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி ஊரட்சிக்குள்பட்ட பகுதியான பிலாக்காவுக்குச் செல்லும் சாலையை அந்தப் பகுதி பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் வெள்ளிக்கிழமை சீரமைத்தனா்.

கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி ஊரட்சிக்குள்பட்ட பகுதியான பிலாக்காவுக்குச் செல்லும் சாலையை அந்தப் பகுதி பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் வெள்ளிக்கிழமை சீரமைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி கிராமத்துக்குச் செல்லும் பகுதிகளில் பீன்ஸ், பலா, உருளை, கேரட், அவக்கோடா உள்ளிட்ட பயிா்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் பிலாக்காவுக்குச் செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேளாண் பொருள்களை எடுத்துச் செல்ல முடியாமல் அவதியடைந்தனா். எனவே, இந்தச் சாலையை சீரமைத்துத் தரக்கோரி அந்தப் பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

ஆனால், வில்பட்டி, அடுக்கம் ஆகிய இரண்டு ஊராட்சிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் சாலையைச் சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com