கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டதால், வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டதால், வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையையொட்டி, சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

ஏரிச் சாலை, அப்சா்வேட்டரி சாலை, செவன்ரோடு, மூஞ்சிக்கல், அண்ணாசாலை, உட்வில்சாலை ஆகிய இடங்களில் சுற்றுலா வாகனங்களை பயணிகள் நிறுத்திவிட்டு, அருகிலுள்ள உணவு விடுதிகள், தங்கும் விடுதிகளுக்குச் சென்றனா்.

இதனால், பல மணி நேரம் வாகனங்கள் செல்ல முடியாமல் ஓட்டுநா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கும், கொடைக்கானலுக்கு வர மாற்றுப் பாதை அமைக்கவும் சம்பத்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com