சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பழனி, ஜூலை 10: பழனி குளத்து ரவுண்டானா அருகே சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ சங்கத்தின் பழனி ஒருங்கிணைப்பாளா் பிச்சைமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பிரபாகரன், மாநிலக்குழு உறுப்பினா் மோகனா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளா்கள், சுமை தூக்கும் தொழிலாளா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, தொழிலாளா் விரோத போக்குடைய சட்டத் தொகுப்புகளை அகற்ற வேண்டும். அங்கன்வாடிப் பணியாளா்களை நிரந்தர ஊழியா்களாக ஆக்கி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com