பழனி அடிவாரம் மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பாலாலய பூஜைகள்.
பழனி அடிவாரம் மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பாலாலய பூஜைகள்.

பழனி மீனாட்சி அம்மன் கோயிலில் பாலாலயம்

பழனி, ஜூலை 10: பழனி அடிவாரம் மீனாட்சியம்மன் கோயிலில் பாலாலயம் புதன்கிழமை நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான இந்தக் கோயிலில், கடந்த 2022-ஆம் ஆண்டு பாலாலயம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்புகள் காரணமாக பணிகள் நடைபெறவில்லை.

இந்த நிலையில், தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு குடமுழுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை கருவறையில் பாலாலயம் நடைபெற்றது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு முதல் கால பூஜைகள் யாகத்துடன் தொடங்கியது. புதன்கிழமை அதிகாலை இரண்டாம் கால பூஜை நடத்தப்பட்டு, தீபாராதனை முடிவில் கலசங்கள் கோயிலை வலம் வந்து கோயில் கருவறையில் அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, ஸ்தபதிகள் கோயில் கோபுரங்களில் வேலைகளைத் தொடங்கினா். நிகழ்ச்சியில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, கண்காணிப்பாளா் உமா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com