ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

திண்டுக்கல், ஜூன் 6: குஜிலியம்பாறை அருகே ரயிலில் அடிபட்டு கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பாளையம் அடுத்த கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வீ.அங்கமுத்து (27). கட்டடத் தொழிலாளி. இவா், பாளையம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது, அந்த வழியாகச் சென்ற ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் இருப்புப் பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளா் கேசவன், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com